ஜனனி சொன்ன ஒரே வார்த்தை, செம ஷாக் ஆன ஈஸ்வரி.... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
முக்கோண கதையாக இப்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் கதைக்களம் செல்கிறது.
ஜனனி, தனது சொந்த வாழ்க்கையை கூட கவனிக்காமல் தன்னை சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கை ஜெயிக்க வேண்டும் என போராடுபவர். தப்புக்கு மேல் தப்பு செய்த குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்பியே ஆக வேண்டும் என போராடும் ஜனனி.

எவ்வளவு தான் தவறு செய்தாலும் சொத்தை கையில் வைத்துக்கொண்டு குடும்பத்தை மிரட்டிவரும் குணசேகரன் ஜனனியை எப்படியாவது அழித்தே ஆக வேண்டும் என என்னென்னமோ செய்து வருகிறார்.
தனது அம்மாவை கொன்று சொத்தை பிடுங்கிய குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தை அழித்தே ஆக வேண்டும் என இருக்கும் ராவணன். இவர்கள் 3 பேரும் நகர்த்து காயில் யார் ஜெயிக்கப்போகிறார் என்பது தெரியவில்லை.

புரொமோ
தற்போது இன்றைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் ஜனனி ராவணன் பற்றி வீட்டில் பேச ஆரம்பிக்க அந்த தம்பியை பற்றி நீ பேசக்கூடாது என குணசேகரன் தடுக்கிறார்.
உடனே ஜனனி இந்த வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தீர வேண்டும் என்றால் நீங்கள் ஜெயிலுக்கு போனால் தான் நல்லது என கூற ஈஸ்வரி செம ஷாக் ஆகிறார். இதோ புரொமோ,
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri