தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் டிவியில் ஒளிபரப்பாகும் விறுவிறுப்பான ஒரு தொடர்.
தனது வீட்டுப் பெண்களை அடிமைப்படுத்தும் குணசேகரன் தான் மட்டுமே ஜெயிக்க வேண்டும், தனது கை மட்டுமே ஓங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்வராக உள்ளார்.
இப்போது கதைக்களத்தில் குணசேகரன், தர்ஷன் திருமணத்தை தான் நினைத்தபடி நடத்தி முடிக்க வேலைகள் செய்து வருகிறார். இதற்கு இடையில் தர்ஷன், பார்கவியை தனியாக அறைக்கு சென்று சந்திக்க அது பெரிய பிரச்சனையை உருவாக்கிவிட்டது.
புரொமோ
இந்த பிரச்சனையில் தந்திரமாக யோசித்து குணசேகரன் நீதிமன்றத்தை அணுகிவிட்டார். பார்கவிக்கு எங்களால் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அவரால் எங்களுக்கு தேவையில்லாத பிரச்சனை வருகிறது என கூறி அவரை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டார்.
குணசேகரன், அறிவுக்கரசியிடம் தனது பிளான் என்ன என்பது புரிந்ததா என கேட்க அவரும் சந்தோஷமாக புரிந்தது என கல்யாண வேலைகளை கவனிக்க தொடங்குகிறார்.
வீட்டைவிட்டு வெளியேறும் பார்கவியிடம் தான் கண்டிப்பாக நியாயம் வாங்கி தருவேன் என கூறுகிறார் ஜனனி. இதோ புரொமோ,