சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் பரபரப்பின் உச்சமாக, அடுத்தடுத்து விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது.
திருச்செல்வம் அவர்கள் இயக்கும் இந்த கதையில் வில்லன்கள் கையே அதிகம் ஓங்கி இருக்கிறது, பெண்களை கேவலப்படுத்தும் விஷயங்கள் தான் அதிகம் நடக்கிறது என ஒருபக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும் கதை இன்னும் மாறாமலேயே உள்ளது.

குண்டாஸ் வழக்கு பாய்ந்தும் அதில் இருந்து விடுபட்டு குணசேகரன் கெத்தாக மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டார், அது எப்படி என தெரியவில்லை. இப்போது வழக்கம் போல பெண்கள் மீண்டும் அடிமையாகிவிட்டனர்.
ஜனனிக்கு என்ன ஆனது என தெரியவில்லை, சக்தி அவரை தேடி அலைந்துகொண்டிருக்கிறார்.

புரொமோ
நாளைய எபிசோடிற்கான புரொமோவில், சக்தி நந்தினிக்கு போன் செய்து ஜனனி பற்றி ஏதாவது தெரிந்ததா என கேட்கிறார். ஆனால் நந்தினி, உங்கள் அண்ணன் வீட்டிற்கு வந்துவிட்டார் என கூற சக்தி செம ஷாக் ஆகிறார்.

குணசேகரனுக்கு ஜனனி கதை முடிந்தது என போன் கால் வருவதாக தெரிகிறது.

இதற்கு இடையில் விசாலாட்சி என்னடா செய்வ என கதிரிடம் கேட்க அவர் சுட்டுப்போட்டு போய்ட்டே இருப்பேன் என அம்மா மீது கையால் துப்பாக்கி வைத்து காட்ட நந்தினி சுடு டா என கோபத்தில் கொந்தளிக்கிறார்.