ஜனனியின் போராட்டம்.. குணசேகரனை கைது செய்யுமா போலீஸ்! எதிர்நீச்சல் தொடர்கிறது புது ப்ரோமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போது பரபரப்பான கதைக்களம் சென்றுகொண்டிருக்கிறது. அதிகாரத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என இருக்கும் ஆதி குணசேகரனுக்கு எதிராக ஜனனி அதிரடியாக பல விஷயங்கள் செய்து வருகிறார்.
ஒரு உயிர் போய்விட்டது, உடனே எப்ஐஆர் போடுங்க என போலீசிடம் கேட்கிறார் ஜனனி. ஆனால் 'அப்படி எல்லாம் போட முடியாது மா..' என போலீஸ் காரர் கூறிவிடுகிறார்.
போராட்டத்தில் குதித்த பெண்கள்
அதன் பின் வழக்கு போடாத போலீசாருக்கு எதிராகவே போராட்டத்தில் அமர்கின்றனர் ஜனனி மற்றும் பெண்கள். ஆனால் அந்த வீடியோவை பார்த்துவிட்டு எகிறும் குணசேகரன் அவர்களை எதாவது செய்துவிட்டு வரலாம் என கத்துகிறார்.
அதற்கு பிறகு போலீசார் ஆதி குணசேகரன் வீட்டுக்கு வருகிறார்கள். இனி என்ன நடக்கும்? ப்ரோமோவை பாருங்க.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
