ஒன்றாக சுற்றுலா சென்றுள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... எங்கு சென்றுள்ளார்கள் பாருங்க
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
ஈஸ்வரி கண் விழித்து விட்டார், நாங்கள் 4 பேரும் புதிய வாழ்க்கையை வாழப்போகிறோம் என நந்தினி சந்தோஷப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் ஈஸ்வரி அனைவருக்குமே ஒரு ஷாக் கொடுத்துள்ளார்.

அதாவது குணமடைந்துள்ள ஈஸ்வரி பழைய விஷயங்களை மறந்துவிட்டாராம், அவருக்கு ஜனனி எல்லாம் யார் என்றே தெரியவில்லை, இப்போதும் தனது கணவர் குணசேகரன் மீது அதே பயத்தில் உள்ளார் என்பது தெரிகிறது.
அடுத்து ஈஸ்வரி வீட்டிற்கு வந்ததும் என்னென்ன பிரச்சனை வரப்போகிறது, மீண்டும் பெண்கள் வீட்டிலேயே முடக்கப்படுவார்களா என்பதையெல்லாம் அடுத்தடுத்த எபிசோடுகளில் காண்போம்.

ரீல்ஸ் வீடியோ
கதைக்களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஒன்றாக நிறைய புகைப்படங்கள் எடுக்க தற்போது இன்ஸ்டாவிலும் ஷேர் செய்துள்ளனர்.

அதோடு சமீபத்தில் வைரலாகியிருக்கும் ஆரா 10க்கு 10 பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளனர், அந்த வீடியோவும் வெளியாகியுள்ளது.