எதிர்நீச்சல் தொடர்கிறது 2 சீரியல் இப்படியொரு சாதனையை செய்துவிட்டதா?... என்ன பாருங்க...
எதிர்நீச்சல் தொடர்கிறது 2
ஹீரோவை அசைக்கமுடியாத நாயகனாக காட்டினால் தான் மக்களுக்கு பிடிக்கும். ஆனால் எதிர்நீச்சல் தொடர்கிறது 2 சீரியலில் இரண்டு சீசன்கள் முடிந்தும் வில்லனை தான் அசைக்கமுடியாத ஒரு நபராக காட்டி வருகிறார்கள்.
ஒரு வில்லன் பத்தாது என்று இப்போது ராவணன் என்ற கொடூர வில்லனும் களமிறங்கியுள்ளார். இந்த இரண்டு வில்லனகளையும் சமாளித்து நியாயத்திற்காக போராடும் ஜனனி எப்படி சாதிக்க போகிறார் என்பதே இப்போதையாக கதையாக உள்ளது.
ராவணன் சக்தியிடம் அடிவாங்கிய பின்னர் இன்னும் கொடூரமான செயல்களை செய்ய ஆரம்பித்துவிட்டார். இன்றைய எபிசோடில், ராவணன் எதையோ ஜனனி-சக்தியிடம் காட்டி பயமுறுத்துகிறார். அப்படி என்ன காட்டினார், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது எல்லாம் பரபரப்பின் உச்சமாக செல்கிறது.

சாதனை
முதல் சீசன் முடிவடைந்து 2வது சீசன் அதே நடிகர்களை வைத்து துவங்கப்பட்டது.
சில நடிகர்களே மாறினார்கள், ஆனால் கதை மட்டும் சுத்தமாக மாறவில்லை. இந்த நேரத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது 2 சீரியல் ரசிகர்களுக்காக ஒரு சூப்பரான நியூஸ் வந்துள்ளது. அதாவது எதிர்நீச்சல் தொடர்கிறது 2ம் பாகம் 600 எபிசோடுகளை எட்டிவிட்டதாம்.