போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
பெண்கள் எழுச்சி பற்றிய கதை என்ற கருவோடு சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
முதல் பாகத்தை விட 2ம் பாகத்தில் கண்டிப்பாக குணசேகரனுக்கு தண்டனை கிடைத்து பெண்கள் சாதிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் அப்படி ஒரு விஷயம் கூட நடக்கவில்லை, பெண்கள் ஒரு படி மேலே சென்றால் 100 அடி கொடுத்து வில்லன் இன்னும் உயருகிறார்.

இதைப்பார்க்கும் போது இந்த கதை பெண்கள் எழுச்சிக்கான கதையா அல்லது வில்லன்களை ஹீரோவாக காட்டும் கதையா என ரசிகர்கள் சீரியலின் புரொமோக்கள் கீழ் நிறைய கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட்
புரொமோ
குணசேகரன் பிளான் படி, அமுதா என்ற பெண் இறந்த குற்றத்திற்கு ஜனனி தான் காரணம் என அதிரடியாக கைது செய்யப்படுகிறார். ஜனனி போலீசிடம் இருந்து திடீரென தப்பிக்கிறார்.

இன்னொரு பக்கம் சக்தி, நந்தினி, ரேணுகா 3 பேரும் மதிவதனியை சந்தித்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறுகிறார்கள், அவரும் ஜனனி மீது எனக்கு சந்தேகம் இல்லை என்கிறார். அந்த நேரம் போலீஸ் கலெக்டர் வீட்டிற்கு வந்து குற்றவாளி உறவினர்கள் இங்கே இருப்பதால் சந்தேகத்தின் பேரில் வீட்டில் தேடுகிறார்கள்.

குணசேகரன் வக்கீல் கதிருக்கு போன் செய்து ஒரு ஆதாரம் உள்ளே இருக்கிறது, அது யார் கைக்கும் செல்ல கூடாது என்கிறார்.
ஜனனிக்கு அந்த ஒரு ஆதாரம் கையில் கிடைத்தால் எல்லா பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். இனி கதை எப்படி செல்லப்போகிறது, வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.