ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்து 2ம் பாகமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
குணசேகரன் என்ற ஆணாதிக்கம் கொண்ட ஒருவரை அழிக்கும் கதையாக அவரது வீட்டுப் பெண்கள் வாழ்க்கையில் ஜெயிக்கும் கதையாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகம் முடிந்து 2வது பாகமே வந்துவிட்டது இன்னும் பெண்கள் சாதிக்கவில்லை.
அடுத்தடுத்து பெண்கள் அடிவாங்கிக்கொண்டே இருக்கிறார்கள், சமையல் அறைக்குள்ளேயே அடைக்கப்படுகிறார்கள்.

புரொமோ
குணசேகரன் தனது தம்பிகளை வைத்து இப்போது பூஜைக்கு ஏதோ ஏற்பாடு செய்துள்ளார், வீட்டுப் பெண்கள் அந்த வேலைகளை தான் கவனித்து வருகிறார்கள்.
கர்ப்பமாக இருக்கும் ஜனனி கொஞ்சம் டென்ஷன் இல்லாமல் இருக்க அவரை கொடைக்கானல் அழைத்துச் சென்றார் சக்தி. அங்கு இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியாமல் தேவசகாயம் அவர்களை பாலோ செய்த வண்ணம் உள்ளார்.

ஜனனியை எப்படியாவது அழித்தே ஆக வேண்டும் என பொறுமையாக பிளான் போடுகிறார். தற்போது வந்துள்ள புரொமோவில், இருவரும் வீட்டிற்கு கிளம்புகிறார்கள்.
அவர்கள் பயணிக்கும் காரை விபத்து ஏற்படுத்த தேவசகாயம் பிளான் போடுகிறார், ஆனால் கடைசியில் என்ன ஆனது தெரியுமா, புரொமோ இதோ,