நிம்மதியாக இருக்க கொடைக்கானல் சென்ற ஜனனி தேடிவந்த ஆபத்து... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
எதிர்நீச்சல் தொடர்கிறது
ஒரே சொத்தை வைத்து சமயத்திற்கு ஏற்றார் போல் அதை வைத்து எல்லோரையும் பிளாக்மெயில் செய்து பின் காரியம் முடிந்ததும் மீண்டும் சொத்தை வாங்கிக்கொண்டு இதே வேளையாக இருக்கிறார் குணசேகரன்.
இப்போது கூட அவரின் சொத்துக்களை தனது தம்பிகள் ஞானம் மற்றும் கதிர் மீது மாற்றி எழுதியுள்ளார்.

எபிசோட்
கடைசி எபிசோடில், கொடைக்கானல் செல்ல கிளம்பிய சக்தி-ஜனனியை நிறுத்தி எங்கே செல்கிறீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு டார்ச்சர் செய்துவிட்டார் ஞானம். நீங்கள் எங்கே வேண்டுமானாலும் செல்லுங்கள் சொத்த விஷயமாக வக்கீல் வருகிறார் இருங்கள் என அவர்களை நிற்க வைக்கிறார்.

பின் ஆடிட்டர்-வக்கீல் இருவரும் வீட்டிற்கு வந்து சொத்து பத்திரத்தில் ஞானம் மற்றும் கதிரை கையெழுத்திட வைக்கிறார். அந்த விஷயம் முடிந்ததும் ஜனனி-சக்தி இருவரும் கிளம்புகிறார்கள்.
ஆபத்து
இன்றைய எபிசோடின் புரொமோவில், ஜனனியை மிகவும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள சக்தி அவரை அழைத்துக்கொண்டு கொடைக்கானல் செல்கிறார். அங்கு செல்லும் வழியில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி தண்ணீர் வாங்கி குடிக்கிறார் சக்தி.
அப்போது பார்த்தால் ஜனனியை கொடுமை செய்த ஆலிவர் வருகிறார், அவரை ஜனனி பார்ப்பாரா அல்லது அங்கேயே அவருக்கு ஆலிவரால் பிரச்சனை ஏற்படுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து காண்போம்.

இராணுவத் தளங்களை மூடுக... வெளிநாட்டில் பிரித்தானியாவிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம் News Lankasri
எதை குறித்தும் கவலைப்படாத திரிஷா.... இன்ஸ்டாகிராமில் இப்போ என்ன சொல்லியிருக்கிறார்னு தெரியுமா? Manithan
உலகக்கோப்பையை வென்ற கையோடு கேப்டன் சூர்யகுமார் எங்கு சென்றார் தெரியுமா? வைரலாகும் வீடியோ IBC Tamilnadu