கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட்
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கடைசியாக பரபரப்பாக ஒளிபரப்பாகிய கதைக்களம் என்றால் தர்ஷன்-பார்கவி திருமணம் தான்.
குணசேகரனா அல்லது ஈஸ்வரியா, யாருடைய விருப்பப்படி தர்ஷன் திருமணம் நடக்கும் என எதிர்ப்பார்க்க கடைசியில் தர்ஷன்-பார்கவி திருமணம் நடந்து முடிந்தது.

நேற்றைய எபிசோட்
பரபரப்பாக ஓடும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நேற்றைய எபிசோடில், ஜனனி மற்றும் தர்ஷினி இருவரு அஸ்வின் வீட்டிற்கு சென்று அங்கு ஏதாவது கிடைக்குமா அங்கு உள்ள எல்லாவற்றையும் சோதனை செய்கிறார்கள், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

இன்னொரு பக்கம் சக்தி கடிதத்தில் இருப்பவர் குறித்து விசாரித்த வண்ணம் உள்ளார். அப்போது ஒருவர் அப்போது வேலை செய்த போஸ்ட் மாஸ்டர் விளாசம் கொடுக்க சக்தியும் அவரை சந்திக்கிறார்.

அந்த போஸ்ட் மாஸ்டர் கடிதத்தை பார்த்துவிட்டு இதை நான் தான் எழுதினேன். அவரது பெயர் தேவகி, வடநாட்டு பெண், மற்றபடி அவரைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. இங்கு நிறைய மடம் உள்ளது, அங்கு சென்று விசாரியுங்கள் என்கிறார்.
அப்போது தேவகி யார் என்ற காட்சிகள் சில இடம்பெறுகின்றன.
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu