சக்திக்கு என்ன ஆனது, குணசேகரன் மறைக்கும் தேவகி யார், பல உண்மை வெளிவந்த எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, விறுவிறுப்பின் உச்சமாக மர்மங்கள் நிறைய கதையாக ஒளிபரப்பாகி வருகிறது.
குணசேகரனை ஆட்டத்தை அடக்க வேண்டும் என்றால் ஒன்று ஈஸ்வரியை அவர் தாக்கிய வீடியோ கிடைக்க வேண்டும் அல்லது அவர் மறைக்க நினைக்கும் தேவகி யார் என்ற விவரம் வெளியாக வேண்டும்.

இந்த இரண்டில் ஒன்று நடந்தால் கூட ஜனனி கூட்டம் அனைவருக்கும் சவால் விட முடியும். ஆனால் அடுத்தடுத்து குணசேகரன் கையே ஓங்கி இருப்பது போல தெரிகிறது.
எபிசோட்
இன்றைய எபிசோடில், புதியதாக என்ட்ரி கொடுத்தவரின் ஆட்கள் சக்தியை காப்பாற்றுகிறார்கள். பின் குணசேகரன் பற்றிய பிளாஷ்பேக் வருகிறது.
தேவகி ஆதிமுத்து குணசேகரனின் 2வது மனைவி, அவரது சொத்துக்களை வாங்கிக்கொண்டே திருமணம் செய்திருக்கிறார். குணசேகரன், எங்களது சொத்துக்களை வாங்கவே திருமணம் செய்தாயா, ஒழுங்காக ஓடிவிடு என மிரட்டுகிறார்.