திடீரென ஜனனி செய்த ரகளை, மண்டபத்தில் ஆரம்பமான கல்யாண வேலை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல்.
குணசேகரன் தர்ஷன் திருமணம் தான் நினைத்தபடி நடத்த வேண்டும் என முதலில் ஈஸ்வரியை அடித்து மருத்துவமனைக்கு அனுப்பினார். பின் திருமண தேதிக்கு முன்னரே மண்டபம் வந்தவர் சக்தி-நந்தினி-ரேணுகா முகத்திரையை கிழக்க திருமண நேரத்தை மாற்றினார்.
இதனால் 3 பேரும் போட்ட பிளானை முறியடித்தார். அடுத்து ஜனனி-ஜீவானந்தம்-பார்கவியை கொலை செய்ய ஆட்களை அனுப்பியுள்ளார், அவர்கள் சொல்லும் செய்திக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
தான் சொன்ன நாளில் சொன்ன நேரத்தில் திருமணம் நடக்கும், ஆம்பளையா இருந்தா தடுத்துப்பார் என சக்திக்கு சவால் விட்டுள்ளார்.
புரொமோ
இன்றைய எபிசோடின் புரொமோவில், ஜனனி அவரால் முடியவில்லை என்றாலும் மருத்துவமனையில் இருந்து கிளம்பலாம் என அடம் பிடிக்கிறார். அவர்க வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
மண்டபத்தில் தர்ஷனை உட்கார வைத்து திருமண வேலைகள் தொடங்கிவிட்டது. மண்டபத்திற்கு வெளியே நந்தினி மற்றும் ரேணுகா காத்துக் கொண்டிருக்கிறார்கள், சக்தி ஆளையே காணவில்லை.
அடுத்து என்ன திருப்பங்களுடன் தொடர் செல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.