திருமணம் நடக்கப்போகும் மிதப்பில் இருந்த குணசேகரன், செக் வைத்த அறிவுக்கரசி.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் தொலைக்காட்சியில் இப்போது டிஆர்பியில் கெத்து காட்டி வரும் தொடர்.
கடந்த சில வாரங்களாகவே தர்ஷன் திருமண போராட்டம் தான் நடக்கிறது. திருமண விஷயத்தில் முதலில் பாதிக்கப்பட்டது ஈஸ்வரி தான், குணசேகரன் அவரை தாக்க இப்போது மருத்துவமனையில் சீரியஸான நிலையில் உள்ளார்.
அவருக்கு இப்படி ஆனது யாரால் என இன்னும் நிரூபிக்க முடியவில்லை. இப்போது மன மேடையில் தர்ஷனும் வந்துவிட்டார், ஜனனியோ விபத்து ஏற்பட்டு பல காயங்களுடன் திருமணத்தை நிறுத்த போராடுகிறார்.
புரொமோ
குணசேகரன், கதிர், அறிவுக்கரசி என அனைவரும் தர்ஷனுக்கு அன்புக்கரசியுடன் திருமணம் நடக்கப்போகும் சந்தோஷத்தில் உள்ளனர். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு டுவிஸ்ட்டாக இன்றைய எபிசோட் புரொமோ அமைந்துள்ளது.
அதாவது கதிர் இன்னும் 5 நிமிடத்தில் நாம் நினைத்தது நடக்கப்போகிறது என கூற யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் போலீஸ் என்ட்ரி ஆகிறார்கள்.
அறிவுக்கரசி போட்டோ கிராபரை கொலை செய்த வழக்கில் கைது செய்ய வந்தோம் போலீஸ் கூற அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
அறிவுக்கரசி நான் தான் கொலை செய்தேன், ஆனால் இந்த ஆளுக்காக தான் செய்தேன் என கூறுகிறார். இந்த பரபரப்பின் உச்சத்தில் உள்ள புரொமோவை பார்த்த ரசிகர்கள் எபிசோட் எப்போது வரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.