சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகும் தொடர்.
இப்போது கதையில் குணசேகரனை லாக் செய்யும் அளவிற்கு இரண்டு விஷயங்கள் ஜனனி கையில் சிக்கியுள்ளது, ஆனால் அதற்கான ஆதாரத்தை திரட்டுவதில் தான் பிரச்சனையே. வீடியோ அஸ்வினிடம் இருந்தது, ஆனால் அதுவும் புதியதாக வந்தவரிடம் கைமாறி விட்டது.
அந்த வீடியோ கிடைக்குமா என ஜனனி வேறு வழியில் போராடி வருகிறார். இன்னொரு பக்கம் சக்தி, குணசேகரனுக்கு எதிராக இராமேஸ்வரத்தில் ஏதாவது கிடைக்குமா என அங்கு சென்றுள்ளார்.

புரொமோ
இன்றைய எபிசோடிற்கான புரொமோவில், சக்தி கடிதத்தில் இருந்தவரை பற்றி தெரிந்துகொள்ள அங்கு எல்லோரிடமும் கேட்டு வருகிறார். அவரை குணசேகரன் அனுப்பிய நபர் பின்தொடர்ந்து வருகிறார்.

கொஞ்சம் அதிகமான போனால் போட்டு தள்ளிவிடு என குணசேகரனும் கூறுகிறார். இன்னொரு பக்கம் அன்புக்கரசி வீட்டில் பிரச்சனை செய்ய தர்ஷன் அவரை வெளியே போக கூறுகிறார், அதைக்கேட்ட குணசேகரன் அவளை வெளியே போக சொல்ல நீ யார்.

எனக்கு நீ மகனே கிடையாது நீ முதலில் வெளியே செல் என்கிறார். ஜனனி, தர்ஷினியை அழைத்துக்கொண்டு அஸ்வின் வீடு செல்கிறார்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    