குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, ஒரு திருமண எபிசோடை பல மாதங்களாக ஓட்டி வருகிறார்கள் இந்த சீரியல் குழுவினர்.
குணசேகரன் என்ற ஆணாதிக்கம் கொண்ட நபரின் வீட்டில் வாழும் பெண்களின் வாழ்க்கை போராட்டமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் உள்ளது.
நேற்றைய எபிசோடில் தர்ஷன் அன்புக்கரசி கழுத்தில் தாலியை வைத்து கட்டும் நேரத்தில் செம மாஸாக என்ட்ரி கொடுக்கிறார் ஜனனி, அவருடன் பார்கவி, ஜீவானந்தம், சக்தி அனைவரும் வருகிறார்கள்.
அவர்களை பார்த்ததும் மண்டபத்தில் தகராறு நடக்கிறது, அந்த நேரத்தில் போலீஸ் அதிகாரிகள் என்ட்ரி கொடுக்கிறார்கள்.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், போட்டோ கிராபரை கொலை செய்த வழக்கில் அறிவுக்கரசியை கைது செய்ய வந்திருக்கிறோம் என போலீஸ் கூறுகிறார்கள்.
உடனே குணசேகரன் அவர் யார் என்றே தெரியாது அழைத்து செல்லுங்கள் என கூற அறிவுக்கரசி இவருக்காக தான் கொன்றேன் என எல்லா உண்மையையும் கூறுகிறார்.
வசமாக சிக்கியுள்ள குணசேகரனை வைத்தே தர்ஷன்-பார்கவி திருமணத்தை நடத்த மாஸ் காட்டுகிறார் ஜனனி. இதோ புரொமோ,