எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் செம மாஸாக அதிரடி கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
மெய்யப்பனுடன் கூட்டணி சேர்ந்து சக்தியை கடத்தி அதன்மூலம் காரியத்தை சாதித்துவிடலாம் என மிகவும் திமிராக இருந்தார் குணசேகரன். ஆனால் ஜனனி அவர்கள் கொடுத்த பிரச்சனைகளை சமாளித்து எப்படியோ சக்தியை காப்பாற்றிவிட்டார்.
அந்த நேரத்தில் ஒரு நீதிபதி ஜனனி கண்ணில் பட இப்போது குணசேகரன் வீட்டைவிட்டு ஓடும் நிலை வந்துவிட்டது.

அறிவுக்கரசி
இதற்கு இடையில் கொலை குற்றத்திற்காக ஜெயில் சென்ற அறிவுக்கரசியை எப்படியோ ஜாமினில் எடுத்து வீட்டில் சேர்த்தார் குணசேகரன். அவர் செய்ய சொன்னார் என ஓவராக அராஜகம் செய்து வந்தார் அறிவுக்கரசி.

இன்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த ஜனனிடம், அறிவுக்கரசி எகிற பின் நடந்த சம்பவமே வேறு தான். அறிவுக்கரசியை தூக்கிப்போட்டு மிதித்து கையை உடைக்கிறார் ஜனனி.
இந்த தரமான சம்பவ புகைப்படங்கள் வெளியாக கூடவே இதுவரை அறிவுக்கரசி வாங்கிய சம்பவங்களின் புகைப்படங்களும் வெளியாகிறது. ரசிகர்களும் அறிவுக்கரசி இதுவரை வாங்கிய சம்பவ புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.