குணசேகரன் மறைத்து வைத்த ரகசியம் கண்டு ஷாக் ஆன சக்தி, என்ன விஷயம் அது... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு எபிசோட்
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் டிவியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் ஒரு தொடர்.
தர்ஷனுக்கு யாருடன் திருமணம் என்ற காட்சி வருவதற்குள் இயக்குனர் ஒவ்வொரு எபிசோட் பல டுவிஸ்ட் வைத்து பார்ப்போரை குழப்பத்திலேயே வைத்து வருகிறார்.
நேற்றைய எபிசோடில், ஜனனி-ஜீவானந்தம்-பார்கவி ரவுடிகளிடம் இருந்து தப்பித்து வேறொரு கும்பலிடம் சிக்கிவிட்டார் என்பது தெரிகிறது.
அவரை லாரி இடிப்பது போல் வந்தது, தப்பித்தார்களா என தெரியவில்லை. இன்னொரு பக்கம் சக்தி, குணசேகரன் அறைக்கு சென்று சொத்து பத்திரம் எல்லாம் செக் செய்கிறார்.
புரொமோ
இன்றைய எபிசோடில், குணசேகரன் அறையில் இருந்த ஒரு பழைய கடிதத்தை சக்தி படித்து ஷாக் ஆகிறார். அது என்ன கடிதமாக இருக்கும் என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதாவது அந்த லெட்டர் மூலம் சக்தி, ஆதி குணசேகரனின் தம்பி இல்லை என்பது அவருக்கு தெரியவந்திருக்கலாம். சக்தியின் தந்தை மிகப்பெரிய பணக்காரராக இருக்கக்கூடும்.
அவரின் சொத்துக்களை அபகரித்து ஆதி குணசேகரன் அனுபவித்து வரும் விஷயம் சக்திக்கு தெரியவந்திருக்கும் என்ற ஒரு கதை சமூக வலைதளங்களில் உலா வருகிறது. ஆனால் உண்மையில் அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது, அப்படி என்ன டுவிஸ்ட் என்பதை பொறுத்திருந்து காண்போம்.