திடீரென ஈஸ்வரியுடன் சண்டை போடும் ஜனனி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
பெண்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு கதை என கூறப்பட்ட எதிர்நீச்சல் தொடர்கிறது ஆண்களுக்கான கதையாகவே அமைந்து வருகிறது.
குணசேகரன் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈஸ்வரி குணமாகி தனது கணவரை ஒரு வழி செய்வார் என்று பார்த்தால் எல்லா விஷயங்களையும் மறந்து இப்போது அவருக்காக காத்துக் கொண்டிருந்த குடும்பத்திற்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

இந்த சமயத்தை பயன்படுத்தி குணசேகரன் ஈஸ்வரியிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்கிறார், தன் மீது போடப்பட்டுள்ள வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்.

புரொமோ
தனது மனைவி ஈஸ்வரியை வெளியே அழைத்துச்சென்ற குணசேகரன் எல்லோருக்கும் ஆடை வாங்கி வந்துள்ளார். அதை ஈஸ்வரி வைத்து எல்லோருக்கும் கொடுக்க வைக்கிறார்.
ஆனால் ஜனனி, ஈஸ்வரி வாங்கி வந்ததை ஏற்க மறுக்கிறார், ஏன் என்று கேட்டதும் உங்களை போல எல்லா விஷயத்தையும் மறந்துவிட்டு என்னால் இருக்க முடியாது என கோபமாக பேசுகிறார்.

அதற்கு ஈஸ்வரி உனக்கு என்மீது ஏதாவது கோபம் இருக்கிறதா என கேட்க, ஜனனியும் ஆமாம் என சொல்கிறார். உங்க மேல நிறைய கோபம், நிறைய ஆதங்கம் இருக்கு. இந்த வீட்டுல இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் என்னால இயல்பாக இருக்க முடியவில்லை.
நீங்க வேண்டுமானால் எல்லாத்தையும் மறந்திருக்கலாம். என்னால அப்படி இருக்க முடியாது என்கிறார் ஜனனி. இதோ இன்றைய எபிசோடின் பரபரப்பு புரொமோ,
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri