கடிதம் தேடிபோன இடத்தில் சக்திக்கு கிடைக்கும் இன்னொரு க்ளூ... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் தொலைக்காட்சியில் டிஆர்பி டாப் 5ல் இருக்கும் தொடர்களில் ஒன்று.
குணசேகரன் எப்போது ஈஸ்வரியை தாக்கினாரோ அன்றிலிருந்து தொடரின் டிஆர்பி டாப்பிற்கு எகிறி வருகிறது.

சக்தி தேவகி யார் அவருக்கு குணசேகரனுக்கும் என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடித்து தனது அண்ணன் முகத்திரையை கிழித்தே ஆக வேண்டும் என இராமேஸ்வரத்தில் சுற்றி வருகிறார்.
இன்னொரு பக்கம் ஜனனி, வீடியோ கிடைக்க இறந்த அஸ்வின் வீட்டிற்கு சென்று தேடிப்பார்த்தார் ஒன்றும் கிடைக்கவில்லை.

அடுத்து தனக்கு கிடைத்த Visiting Card வைத்து புதியதாக என்ட்ரி கொடுத்தவர் அலுவலத்திற்கு சென்றார் அங்கேயும் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு நடுவில் ஈஸ்வரியின் அப்பா வீட்டிற்கு வந்து குணசேகரனுக்கு ஆதரவாக பேசி குழப்பத்தை ஆரம்பித்துள்ளார்.
புரொமோ
இன்றைய எபிசோடின் புரொமோவில், சக்திக்கு தேவகி குறித்து மேலும் ஒரு க்ளூ ஒரு மடத்தில் கிடைக்கிறது. வீட்டில் நந்தினி, ஈஸ்வரி அப்பா வந்த விஷயத்தையும் நடந்த விஷயங்களையும் கூறி பயப்படுகிறார்.
ஆனால் ஜனனி பொறுமையாக பார்த்துக் கொள்ளலாம் என கூறிவிட்டு கொற்றவையிடம் இந்த விஷயங்கள் குறித்து பேசுகிறார்.