ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, அடுத்து என்ன தான் நடக்கும், எப்படி ஜனனி பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு தான் அதிகம் உள்ளது.
ஜனனி வீடியோ கிடைக்க அஸ்வின் வீடு, திடீரென குணசேகரன் வீட்டிற்கு வந்த நபர் அலுவலகம் என எங்கேயாவது வீடியோ கிடைக்காதா என சுற்றிக் கொண்டே இருக்கிறார்.
சக்தி தேவகி யார் என்பதை அரிய இராமேஸ்வரம் செல்ல தனுஷ்கோடிக்கு போக வேண்டிய நேரத்தில் மழை சொதப்புகிறது.

புரொமோ
தற்போது இன்றைய எபிசோடின் புரொமோவில், தொழில் முன்னேற்றத்திற்கான வேலைகளில் ஜனனி, நந்தினி இறங்கியுள்ளனர்.
    
    தேவகியாக, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகையின் நிஜ அம்மா தான் நடிக்கிறாரா?... வெளிவந்த சுவாரஸ்ய தகவல்
இன்னொரு பக்கம் கொற்றவை ஜனனியிடம் இன்னும் 2 நாட்களில் வீடியோ கிடைத்துவிடும் என்கிறார்.

பின் ஜனனி, வீட்டில் அனைவருடனும் பேசிக் கொண்டிருக்கும் போது வீடியோ நம்மிடம் இல்லை என்பது அவர்களுக்கு தெரியாது என கூறிக்கொண்டிருக்க கரிகாலன் அந்த இடத்திற்கு வந்து அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறார்.
தான் தெரிந்துகொண்ட ரகசியத்தை குணசேகரனிடம் கூறி பிரச்சனை ஏற்படுத்துவாரா அல்லது என்ன நடக்கிறது என்பதை இன்றைய எபிசோடில் காண்போம்.