ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் பெண்களை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
ஆணாதிக்கம் கொண்ட குணசேகரன் வீட்டிப் பெண்கள் எதிர்நீச்சல் போட்டு சவால்களை சந்தித்து எப்படி முன்னேறுகிறார்கள் என்பதை நோக்கிய கதை என்றனர்.
ஆனால் கதை தொடங்கிய நாள் முதல் இருந்தே பெண்களுக்கு எதிரான அராஜகம் தான் அதிகம் உள்ளது.

சக்தியை காப்பாற்றிய ஜனனி கொடுத்த வழக்கு மூலமாக நியாயம் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். குணசேகரன் ஓடிஒளிந்து இப்போது பாண்டிச்சேரியில் தஞ்சம் அடைந்துள்ளார்.
புரொமோ
தற்போது இன்றைய எபிசோடின் புரொமோவில், கொற்றவை நடந்த விஷயங்களை விசாரிக்க வீட்டிற்கு வருகிறார், அனைவரிடமும் நடந்த விஷயங்களை கூறுமாறு வாக்குமூலம் வாங்குகிறார்.

ஜனனி இந்த விஷயத்தை விசாலாட்சியிடம் கூற அவர் கொஞ்சம் தயங்குகிறார்.
கொற்றவையிடம் அவர் நடந்த உண்மைகளை கூறுவாரா, குணசேகரனுக்கு ஆதரவாக பேசுவாரா அல்லது கடைசி மகனுக்கு நியாயம் கிடைக்க பேசுவாரா என்பதை எபிசோடில் காண்போம்.