அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அடுத்தடுத்து பரபரப்பின் உச்சமாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
சக்திக்கு தேவகி பற்றிய உண்மைகள் எப்படி தெரிய வருமோ தெரியவில்லை. அவருக்கு ஏதாவது தெரிய வந்தால் உடனே அவரை கொன்றுவிட ஆளையும் ஏற்பாடு செய்துவிட்டார் குணசேகரன்.
அடுத்து ஜனனி இன்னொரு பக்கம் வீடியோவிற்காக அலைந்து கொண்டிருக்கிறார்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், அன்புக்கரசி பார்கவியிடம் சென்று தர்ஷன் பற்றி ஏதாவது தெரிய வேண்டும் என்றால் என்னிடம் கேள் நான் கூறுகிறேன் என்கிறார்.
இதனால் கோபப்பட்ட பார்கவி, மரியாதையாக இதோடு நிறுத்திக்கொள் என்கிறார்.

உடனே ஜனனி, அன்புக்கரசி இப்படியெல்லாம் செய்வது நமக்குள் பிரச்சனையை உருவாக்குவது தான், நீங்கள் ஏன் பெங்களூரு செல்ல கூடாது என்கிறார். தனக்கு நியாபக மறதி என ஏமாற்றும் கரிகாலன், ஜனனி அன்கோ பேசும் விஷயங்களையும் ஒட்டுக் கேட்கிறார்.