ஈஸ்வரியை அசிங்கமாக பேசிய அன்புக்கரசி, கழுத்தை பிடித்த தர்ஷினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, தங்களது விடுதலைக்காக குணசேகரன் வீட்டுப் பெண்கள் பல சவால்களை சந்தித்து எதிர்நீச்சல் போட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
எந்த தான் செய்தாலும் குணசேகரன் என்ற ஆணாதிக்கம் கொண்ட ஒருவரை வீழ்த்த முடியவே இல்லை.
இப்போது அவரை வீழ்த்த வேண்டும் என்றால் ஈஸ்வரியை அவர் தாக்கிய வீடியோ அல்லது தேவகி யார் என்ற உண்மை ஜனனி-சக்தி தெரிந்தால் பிரச்சனை முடிந்துவிடும்.

ஆனால் இது இரண்டுமே நடப்பதாக தெரியவில்லை.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், கரிகாலன், தர்ஷன்-பார்கவியை பெங்களூரு அனுப்ப ஜனனி பிளான் போடும் விஷயத்தை குணசேகரனிடம் கூறுகிறார்.
பின் நான் சொல்வது போல் செய் என கரிகாலனிடம் ஒரு விஷயம் கூறுகிறார்.

அடுத்து அன்புக்கரசி வீட்டில் இருக்கும் அனைவரையும் வைத்து ஈஸ்வரியை பற்றி படு மோசமாக பேசுகிறார். இதனால் கோபத்தில் தர்ஷினி, அன்புக்கரசி கழுத்தை பிடித்து தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
இதைப்பார்க்கும் போது வீட்டில் இருப்பவர்களை மற்ற விஷயங்கள் பற்றி யோசிக்க விடாமல், வெளியே அனுப்ப விடாமல் குணசேகரன் போடும் திட்டம் போல் தெரிகிறது. இதோ புரொமோ,