வெளிச்சத்துக்கு வந்த அறிவுக்கரசி செய்த வேலை, ஆபத்தில் ஜீவானந்தம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் கோலங்கள் என்ற வெற்றி சீரியலை கொடுத்தவர் திருச்செல்வம். இடையில் கொஞ்சம் கேக் எடுத்து பின் அவர் இயக்கி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல்.
முதல் பாகம் சன் டிவியின் டிஆர்பியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது, டாப்பில் தொடர் ஓடிக் கொண்டிருக்க குணசேகரனாக நடித்த மாரிமுத்து இறப்பிற்கு பிறகு சீரியல் ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை.
இதனால் தொடரை திடீரென முடித்துவிட்டார்கள், ரசிகர்களுக்கே ஷாக்காக தான் இருந்தது. ஆனால் அதேவேகத்தில் எதிர்நீச்சல் சீரியலின் 2ம் பாகம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
புரொமோ
இப்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் திருமண கதைக்களம் தான் ஹைலைட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. திருமண நாளுக்கு இன்னும் சில நாட்கள் இருக்கும் முன்னரே குணசேகரன் மற்றும் குடும்பத்தினர் மண்டபம் சென்றுவிட்டனர்.
மண்டபத்தில் சக்தி, தர்ஷனின் இந்த நிலைமை குறித்து கேள்வி எழுக்க இன்றைய எபிசோடில் மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளிக்கிறார். அப்படி சிகிச்சை அளித்ததில் தர்ஷனுக்கு உணவில் ஏதோ கலந்து கொடுத்திருப்பதை சக்தியிடம் மருத்துவர் கூற அவர் ஷாக் ஆகிறார்.
இன்னொரு பக்கம் ஜீவானந்தம் இருக்கும் இடத்தை Drone உதவியுடன் கண்டுபிடித்துவிடுகிறார்கள். இதோ இன்றைய எபிசோடின் பரபரப்பு புரொமோ,