குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
தர்ஷன்-பார்கவியை சேர்த்து வைக்க ஜனனி, நந்தினி, ரேணுகா போராடி வருகிறார்கள், ஆனால் அன்புக்கரசி அதை நடக்க விடாமல் ஏதேதோ செய்கிறார்.
நேற்றைய எபிசோடில், தர்ஷன்-பார்கவி வெளியே செல்ல கூடாது என்பதற்காக ஏதேதோ பேசி அவர்களை வீட்டைவிட்டு வெளியே போகாதபடி செய்துவிட்டார்.
குணசேகரன் தனது தம்பிகளை அழைத்துக்கொண்டு எங்கேயோ சென்று செட்டில் ஆகியிருக்கிறார்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், இந்த குடும்பத்தை மொத்தா அழிக்க நினைத்த விஷச் செடியை வேறொடு புடிங்கி எறிந்துவிட்டேன் என்கிறார், சக்தியை தான் கூறுகிறாரா என்பது தெரியவில்லை.

இன்னொரு பக்கம் வீட்டிலேயே பார்கவி-தர்ஷனுக்காக நந்தினி, ரேணுகா, ஜனனி ஏற்பாடு செய்கிறார்கள்.
அந்த விஷயத்தை கரிகாலன் குணசேகரனிடம் கூற அன்புக்கரசி வீட்டில் இருக்கிறாள் தானே அவள் பார்த்துக்கொள்வாள் என்கிறார்.