சொல்லி தான் ஆக வேண்டும், எத்தனை நாள் மூடி மறைக்க முடியும், நந்தினி கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
முதல் பாகம் முடிவடைந்து இப்போது 2வது பாகம் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. குணசேகரன் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்ட பின்பும் போலீஸில் கண்ணில் படாது தலைமறைவாகிய வண்ணம் உள்ளார்.

புரொமோ
ஜனனி தொழில் தொடங்கும் நாளை திறப்பு விழாவிற்கு பதிலாக இறப்பு விழாவாக மாற்றுவேன் என குணசேகரன் கூறியிருந்தார். ஆனால் கடைசியில் ஜனனி எல்லா தடைகளையும் தாண்டி கடையை திறந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

ஆனால் அவர் நிம்மதியாக கடையை நடத்த கூடாது என குணசேகரன் குடைச்சல் கொடுத்த வண்ணம் உள்ளார். இன்றைய எபிசோட் புரொமோவில், விசாலாட்சி தனது மருமகள்களுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் நந்தினி, சொல்லி தான் ஆக வேண்டும், எத்தனை நாள் மூடி மறைக்க முடியும் என கூற ஜனனி வேண்டாம் என்கிறார்.
ஆனால் எதைப்பற்றி பேசுகிறார்கள், ஜனனி என்ன வேண்டாம் என கூறுகிறார் என்பதை இன்றைய எபிசோடில் காண்போம்.