குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
ஒரு கல்யாணத்தை முடிப்பதற்குள் எவ்வளவு பிரச்சனை, அதிலும் சன் டிவி சீரியல்களில் சொல்லவே வேண்டாம்.
திருமணம் நடக்கிறது என்றால் தான் புதுபுது பிரச்சனையாக வரும் அதை சரிசெய்து திருமணம் முடிப்பதற்குள் ஒரு மாதம் ஆகிவிடும். அப்படி தான் சில மாதங்களாக தர்ஷனுக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற பரபரப்பிலேயே எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இருந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் தரமான சம்பவம் நடந்தது, அதாவது அறிவுக்கரசி தான் கொலை செய்த விஷயத்தை ஒப்புக்கொள்கிறார், எல்லோரின் காலில் விழுந்து தனது தங்கை திருமணத்தை நடத்துங்கள் என்கிறார்.
ஆனால் குணசேகரன் வாயாலேயே தர்ஷனுக்கும் பார்கவிக்கும் தான் திருமணம் என்று கூற வைத்துவிட்டார்கள்.
புரொமோ
இன்றைய எபிசோடில் புரொமோவில், குணசேகரன் முன்னிலையில் தர்ஷன்-பார்கவி திருமணம் நடக்கிறது. ஜெயித்த சந்தோஷத்தில் ஜனனி, நந்தினி, ரேணுகா இருக்க தோல்வியுற்ற குணசேகரன் வீட்டிற்கு வந்துவிடுகிறார்.
அவருக்கு நான் நியாயம் கேட்பேன் இன்று பாருங்கள் என ஞானம் கோபமாக பேசுகிறார். திருமணம் நடந்தாலும் நாம் அவர்களுக்கு கொடுக்க நினைத்த தண்டனை இன்னும் முடியவில்லை என ஜனனி கூறுகிறார்.
அடுத்து ஈஸ்வரி தாக்கப்பட்ட பிரச்சனை குறித்த கதைக்களம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.