ராணாவிற்கு எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஷாக் கொடுத்த ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் அடுத்து என்ன அடுத்து என்ன என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இத்தனை நாள் குணசேகரன் தான் வில்லனாக இருந்தார், ஆனால் அவரைவிட கொடூர வில்லனாக ராணா வந்துள்ளார். நல்லவன் போல் நடித்து குணசேகரன் குடும்பத்தை மொத்தமாக அழிக்க பிளான்கள் போட்டு வருகிறார்.

சொத்தை குணசேகரன் ராணாவிற்கு மாற்ற நினைத்த விஷயம் ஓடிக் கொண்டிருக்கிறது. குணசேகரன் எடுத்த முடிவை வீட்டுப் பெண்கள் சரியில்லை என கூறி சண்டை போட்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் புதியதாக கதிர் வேறு கம்பெனிக்கு நந்தினி பெயரை வைக்கலாம் கூறியிருக்கிறார்.
இனி அடுத்த கதைக்களத்தில் என்ன நடக்குமோ பொறுத்திருந்து காண்போம்.

புரொமோ
இன்று ஜுலை 10ம் தேதிக்கான எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில், ராணாவிடம் குணசேகரன், சக்தி-ஜனனியை சாதாரணமாக நினைக்காதீர்கள், அவர்கள் நோண்டி நோண்டி உண்மையை கண்டுபிடித்துவிடுவார்கள் என கூறுகிறார்.

அடுத்து தர்ஷினிடம் குணசேகரன், உன்னை சுட பரதேசி பையனிடம் இருந்து இவர்தான் காப்பாற்றி அழைத்து வந்துள்ளார் என்கிறார். உடனே ஜனனி அவள் தான் சுட்டவனையே பார்த்துவிட்டாளே என கூற ராணா செம ஷாக் ஆகிறார்.
அதோடு ஜனனி நாம் இருக்கும் இடம் எப்படி ராணாவிற்கு தெரியும், அவன் எப்படி அந்த இடத்திற்கு வந்தான் என சக்தியிடம் தனது சந்தேகங்கள் குறித்து ஜனனி பேசுகிறார்.
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu