குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இப்போது பரபரப்பின் உச்சமாக ஒரு விஷயம் நடக்கிறது.
அதாவது குணசேகரன் பற்றிய ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இராமேஸ்வரம் சென்ற சக்திக்கு அந்த கடிதத்தில் இருப்பவர் பெயர் தேவகி என்பது தெரிந்து அடுத்தடுத்த விஷயங்களும் தெரிய வந்துள்ளது.

நேற்றைய எபிசோடில், சக்தியை கொலை செய்ய வந்தவர்களை புதிய நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்கிறார்கள். வந்தவர்கள் யார் என்று தெரியாமல் சக்தி குழம்பி போய்யுள்ளார்.
அங்கிருந்து சென்றவர் தனுஷ்கோடியில் உள்ள ஒருவரை சந்திக்கிறார், அந்த சமயத்தில் ஜனனி சக்தி போன் செய்ய அவருக்கு தெரியாமல் போன் ஆன் ஆகிவிடுகிறது. அப்போது ஒருவர் குணசேகரன் பற்றியும், தேவகி பற்றியும் மொத்த உண்மையையும் கூறுகிறார்.

புரொமோ
தேவகி தனது அப்பாவின் 2வது மனைவி அவர் சொத்து பறித்து விடுவாரோ என்ற பயத்தில் குணசேகரன் அவரை கத்தியால் குத்திவிடுகிறார்.

அவரது மகன் உங்களை கொன்றவர்களை நான் சும்மா விடமாட்டேன் என சபதம் எடுக்கிறார். குணசேகரன் தேவகியை கொன்றார் என்ற தகவலை அறிந்த ஜனனி, நந்தினி, ரேணுகா அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறார்கள்.
இதோ இன்றைய எபிசோடின் புரொமோ,