சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
என்னடா இது, டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் என ரசிகர்கள் பார்க்கும் அளவிற்கு பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
குணசேகரன் ரகசியத்தை பற்றி தெரிந்துகொள்ள இராமேஸ்வரம் சென்ற சக்தியை கொலை செய்ய ஒரு சம்பவம் நடந்தது.

குணசேகரன் ஆட்கள் சக்தியை கொலை செய்ய சண்டை போட்ட நேரத்தில் திடீரென 2 நபர்கள் வந்து துப்பாக்கியால் சுட்டனர், ஆனால் அவர்கள் யார் என தெரியவில்லை.
இப்படி ஆனாலும் சக்தி உண்மையை அறிந்து குணசேகரன் இப்படிபட்டவரா என்ற ஷாக்கில் உள்ளார். அந்த விஷயத்தையும் எதிர்ப்பாரா விதமாக ஜனனி, ரேணுகா, நந்தினி அறிந்துகொண்டு கதறி அழுது புலம்புகிறார்கள்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், முதல் தாக்குதலில் சக்தி தப்பித்துவிட்டார் என்பதை அறிந்த குணசேகரன் அடுத்த பிளான் போட ஆரம்பித்துவிட்டார்.

இன்னொரு பக்கம் அன்புக்கரசி, இப்படியே முறைத்துக்கொண்டு இருக்காமல் ஏதாவது செய்யுங்கள், வொர்க் அவுட் ஆகிறதா பார்ப்போம் என்ற சவால் விட்டு வீட்டிற்குள் செல்கிறார்.