கொற்றவைக்கு பதிலாக ஆஜரான போலீஸ், பதற்றத்தில் குணசேகரன், ஜனனி கண்டுபிடித்த உண்மை... எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது
பெண்களை மையப்படுத்தி சன் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி, அதில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
முதல் பாகம் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து இறப்பிற்கு பிறகு டிஆர்பியில் அடி வாங்க முடிக்கலாம் என முடிவு செய்தார்கள், ரசிகர்களும் 2ம் பாகம் எல்லாம் வராது முடிந்துவிடும் என இருந்தார்கள்.
ஆனால் சில நடிகர்கள் மாற்றத்துடன் எதிர்நீச்சல் தொடர்கிறது என 2வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் பாகத்தை விட 2ம் பாகம் இன்னும் விறுவிறுப்பின் உச்சமாக உங்களுக்கு சமமாக நாங்கள் என பெண்கள் கூறும் அளவிற்கு கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.
புரொமோ
இப்போது கதையில், குணசேகரனால் தாக்கப்பட்ட ஈஸ்வரி மருத்துவமனையில் சீரியஸான நிலையில் உள்ளார். அவரது வழக்கை விசாரிக்க கொற்றவை இறங்கினார், ஆனால் அவரை இந்த வழக்கில் இருந்து தூக்கிவிட்டார்கள்.
ஜனனி எப்படியோ போராடி உடனே இந்த வழக்கை விசாரிக்கும்படி செய்துள்ளார்.
இன்றைய எபிசோட் புரொமோவில், குணசேகரன் வீட்டிற்கு புதிய போலீஸ் வந்து வழக்கை நன்றாக படித்ததில் அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இதனால் வீட்டில் உள்ளவர்களை விசாரிக்க வேண்டும் என்கிறார், இதனால் குடும்பமே ஷாக் ஆகி நிற்கிறார்கள்.
இன்னொரு பக்கம் ஜனனி, கொற்றவை விசாரிக்க வந்தபோது அறிவுக்கரசி அறையில் இருந்து வெளியே வந்தார் என்றார் என கூற நந்தினி அவளுக்கு நம் அறையில் என்ன வேலை என்கிறார்.
இதனால் ஜனனி, அறிவுக்கரசி தான் ஏதோ செய்துள்ளார் என்கிறார். இங்கு மருத்துவமனையில் பார்கவி ஈஸ்வரியை பார்க்க வந்துள்ளார், அவரை கண்டு ஜீவானந்தம் செம ஷாக் ஆகிறார்.