ஒரு முடிவுக்கு வந்த குணசேகரன், பதற்றத்தில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
பெண்கள் இந்த நாட்டின் கண்கள், கொண்டாட வேண்டியவர்கள் என பலர் பேசினாலும், பெண்களை அடிமைப்படுத்தும் கூட்டமும் நிறைய இருக்கிறது.
அப்படி ஆணாதிக்கம் கொண்ட ஒரு நபரின் கதையாக தான் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
தனது வீட்டுப் பெண்கள் இல்லை தனது தம்பிகள் கூட தனக்கு கீழ் தான், தானே ராஜா தானே மந்திரி என்ற எண்ணம் கொண்ட குணசேகரன் கதையில் செய்யாத அட்டூழியம் இல்லை.

எல்லா தவறுக்கும் சேர்த்து அவர் மீது குண்டாஸ் வழக்கு பாய்ந்துள்ளது.
ஆனால் அவர் தனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து தலைமறைவாகியுள்ளார்.
புரொமோ
அறிவுக்கரசி, ஜனனி தொழில் நன்றாக நடக்கக்கூடாது என என்னென்னவோ செய்து வருகிறார், ஆனால் ஜெயிக்க முடியவில்லை. இன்றைய எபிசோடில், அறிவுக்கரசி சமையலுக்கு பயன்படுத்தும் நெய்யை மாற்றி வைத்தார்.
ஆனால் அது எப்படியோ வேலை கேட்டு வந்த புதிய பெண்ணால் கீழே கொட்டிவிட்டது.

நாளைய எபிசோட் புரொமோவில், தனது தம்பிகளை வைத்து ஓரு விஷயம் முடிவு செய்துவிட்டதாக குணசேகரன் கூறுகிறார், என்ன விஷயம் என தெரியவில்லை.
இன்னொரு பக்கம் அறிவுக்கரசி செய்த விஷயத்தை அறிந்த நந்தினி பதற்றம் அடைகிறார். ஜனனியிடம் அவளை வீட்டைவிட்டு வெளியே அனுப்பியே ஆக வேண்டும் என கூற அவர் கண்டிப்பாக அனுப்ப வேண்டும், ஆனால் கொஞ்சம் யோசித்து செய்வோம் என்கிறார்.