எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது.
குணசேகரன் என்ற ஆணாதிக்கம் கொண்டவரின் திமிரை அடக்கி பெண்கள் சுதந்திரம் அடைய வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை. ஆனால் கதை போகும் போக்கை பார்த்தால் பெண்கள் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.
எதிலும் ஜெயிக்க முடியாத அளவிற்கு கதை சென்றுகொண்டே இருக்கிறது. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோக்களுக்கு கீழே பார்த்தாலும் பெண்கள் ஜெயிக்கவில்லை என்ற புலம்பல் இருக்கும்.

புரொமோ
சக்தியை கடத்தி வைத்துள்ள குணசேகரன் காலில் ஜனனி விழுந்த எபிசோட் பார்ப்போரையும் கோபப்பட வைத்தது, வருத்தமும் அடைய வைத்தது.
ஜனனி தைரியமாக போராட வேண்டும் என பல பெண்கள் ஆதங்கப்பட்டு வருகிறார்கள். இப்படி கதைக்களம் செல்ல நாளைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் ஜனனி, சக்தி கிளம்பும் போது போட்ட வாய்ஸ் மெசேஜ் கேட்கிறார்.

பின் வீட்டில் ரேணுகா ஜனனியை வெளியே அனுப்பிவிட்டு அடுத்த நாடகமா என குணசேகரன் எதையும் ஆரம்பிக்கவில்லை, எல்லாம் முடிச்சாச்சு, போன் பாருங்கள் என்கிறார். போனில் எதையோ பார்த்து தர்ஷினி ஷாக் ஆகிறார்.
இதோ புரொமோ,