ஜனனியை தொடர்ந்து பார்கவிக்கு குணசேகரன் வைத்த செக், வீட்டிற்கு வந்த போலீஸ்..எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் டிவியில் பரபரப்பின் உச்சமாகவே ஒளிபரப்பாகும் ஒரு சீரியல்.
வில்லன்-ஹீரோ இருவருக்கும் சமமான போட்டியாக இருந்தால் தான் பார்க்க ஆர்வமாக இருக்கும். ஆனால் கதையில் அதிகம் வில்லன் ஜெயிப்பது போலவும் அதிகம் பாதிக்கப்படுவது ஹீரோவாகவே உள்ளது.

இப்போது கதையில் இராமேஸ்வரத்தில் சக்தியை அழிக்க நினைத்தார் அது முடியாமல் போக அடுத்த பிளானில் ஜெயித்துவிட்டார் குணசேகரன். ஜனனியின் பெரியப்பா மகனை வைத்து சக்தியை கடத்தி ஜனனிக்கு செக் வைத்துவிட்டார்.
சக்தியை மீட்க வீடியோவை நான் கொடுத்துவிடுகிறேன் என ஜனனி அவர்கள் கூறும் இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்.
நேற்றைய எபிசோடில், தர்ஷன்-அன்புக்கரசி திருமணம் பதிவாகி இருப்பதாக வீட்டில் இருப்பவர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், அன்புக்கரசி தர்ஷனுடன் திருமணம் பதிவானதை வைத்து ஒரு நாடகம் போடுகிறார்.
பார்கவியை வீட்டைவிட்டு வெளியே அனுப்ப குணசேகரன் போலீஸை வரவழைக்க நந்தினி அவரை காப்பாற்ற ஏதேதோ கூறுகிறார். இன்னொரு பக்கம் ஜனனி, சக்தி நிலைமை நினைத்து என்ன செய்வது என தெரியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்.