சக்தி, ஜனனிக்கு செக் வைக்க கதிர் செய்த வேலை, ஆனால் கடைசியில்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஈஸ்வரியை தாக்கிய வீடியோ ஜனனியிடம் இருக்கிறது என்று நினைத்து குணசேகரன் அமைதியாகவே உள்ளார்.
ஆனால் ஜனனியிடம் வீடியோ இல்லை, அதை கைப்பற்றி கெவின் நண்பரிடம் வாங்க நினைத்தால் அவர் புதியதாக வந்தவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வீடியோவை அங்கே கொடுத்துவிட்டார்.
புதியதாக என்ட்ரி கொடுத்தவர் யார் என்பது தெரியவில்லை. இதற்கு இடையில் குணசேகரன் தலைமறைவாகிவிட்டார், கதிரிடம் சக்தி நமக்கு எதிராக ஆதாரங்களை எடுக்கிறான் அது நமக்கு ஆபத்து, அதற்கான ஏற்பாடுகள் செய்துவிட்டு வருகிறேன் என கூறியுள்ளார்.
புரொமோ
தற்போது இன்றைய எபிசோடின் புரொமோவில், கதிர் சொன்னதால் இரவு மாடிக்கு சென்று ஏதோ செய்துள்ளார் கரிகாலன்.
அதை கண்டுபிடித்த சக்தி, கரிகாலனை செமயாக வெளுத்து வழங்குகிறார், கதிர் சொல்லி தானே வந்தாய் என கேட்க அனைவரும் முழிக்கிறார்கள். பின் கதிர், யாரும் இனி வெளியே செல்ல முடியாது, அவ்வளவு தான் என மிரட்டுகிறார்.
பின் விசாலாட்சி வழக்கம் போல் நந்தினி, ரேணுகாவிடம் சண்டை போட ஜனனி பதிலடி கொடுக்கிறார்.