நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் டிவியில் பரபரப்பின் உச்சமாக ஒரு திருமணத்தை வைத்து சில வாரங்களாக கதைக்களம் சென்து கொண்டிருக்கிறது.
தர்ஷன் திருமணம் பார்கவியுடனா அல்லது அன்புக்கரசியுடனா என்ற பெரிய கேள்வி உள்ளது. இதோ பதில் என ஒவ்வொரு நாளும் பரபரப்பின் உச்சமாக கதைக்களத்தை கொண்டு செல்கிறார் இயக்குனர்.
புரொமோ
மண்டபத்தில் மேக்கப் போடும் பெண்ணுடன் அடையாளத்தை மறைத்து தர்ஷன் அறைக்கு செல்கிறார் நந்தினி. அவனிடம் ஜனனி பார்கவியை தேடி சென்றுள்ள விஷயம் அனைத்தையும் கூற அவரும் சித்தியின் பிளானுக்கும் சம்மதிக்கிறார்.
இன்னொரு பக்கம் ஒரு பெட்டிக் கடையில் போனை சார்ஜ் போட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போது குணசேகரன் ஆட்களை பார்த்து மறைந்து கொள்கிறார் ஜனனி.
கடைக்கு வந்த அடியாட்கள் ஜனனி போட்டோ காட்டி இவரை பார்த்தீர்களா என கேட்க இல்லை என்கிறார்.
அப்போது ஜனனியின் போன் அடிக்க, வந்திருந்த ஆள் போனை எடுக்கிறான். மறுபக்கம் நந்தினி பேச போன் கட்டாகிவிடுகிறது. நந்தினி சார்ஜ் இல்லாமல் போன் ஆஃப் ஆகிவிட்டதாக தர்ஷனிடம் சொல்கிறாள்.
நந்தினி பேசியது ஏதாவது அடியாட்கள் கேட்டார்களா, ஜனனி, ஜீவானந்தம்-பார்கவியை சந்திப்பாரா என பல கேள்விகள் எழுந்து வருகிறது. இதோ புரொமோ,