பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது
குணசேகரனை பார்கவி அப்பா இறந்த விஷயத்தில் ஜெயிலுக்கு அனுப்ப ஜனனி ஆகியோர் போராடினார்கள்.
ஆனால் அவர் தான் Criminal மூளையாச்சே, தனது தம்பி ஞானத்தை பகடைகாயாக வைத்துவிட்டார், கதிரை அனுப்பினால் அவன் தண்டனை அனுபவிக்கட்டும் என பெண்கள் நினைப்பார்கள், ஆனால் ஞானத்தை அப்படி நினைக்க மாட்டார்கள் என யோசித்து செய்துவிட்டார்.
அவர் இனி ஜெயிலில் இருந்து வெளியே வருவாரா என தெரியவில்லை.
இன்னொரு பக்கம் பெண்கள் போலீஸ் பாதுகாப்போடு வீட்டிற்கு பார்கவியை அழைத்து வருகிறார்கள்.
புரொமோ
இன்றைய எபிசோடில் ரேணுகா தனது கணவரை ஜெயிலுக்கு அனுப்பியதற்காக குணசேகரனிடம் சண்டை போடுகிறார்.
பின் தர்ஷனிடம் உனக்கு இரண்டே வழி தான் ஒன்று அன்புக்கரசியை திருமணம் செய்வது, இரண்டாவதுவும் அன்புக்கரசியை திருமணம் செய்வது தான் என கூறுகிறார்.
சீரியலில் ஜனனி, நந்தினி, ரேணுகா 3 பேரும் அறிவுக்கரசியை ரூமில் போட்டு வெளுத்து வாங்குகிறார்கள்.
அடுத்தடுத்து எதிர்நீச்சலில் பரபரப்பான காட்சிகள் வர ரசிகர்களும் ஆர்வமாக சீரியலை பார்த்து வருகிறார்கள்.

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
