ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவி, சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி.
இதில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களும் பரபரப்பின் உச்சமாக ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகிறது.
இப்போது சன் டிவியில் ஒளிபரப்பகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அடுத்து என்ன ஆகும் அடுத்து என்ன ரசிகர்கள் ஷாக் ஆகும் அளவிற்கு நிறைய விஷங்கள் நடக்கிறது.
புரொமோ
இப்போது கதையில், குணசேகரன் தாக்கியதால் ஈஸ்வரி ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எப்போது நினைவு திரும்பும் என தெரியவில்லை, மோசமான நிலையில் உள்ளார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி மருத்துவமனையில் இருப்பது அறிந்து குணசேகரன் அம்மா தவிக்கிறார்.
ஆனால் குணசேகரன் மருத்துவமனை சென்று பார்க்க வேண்டும் என்றால் என்னையும், இந்த வீட்டையும் தலைமுகுகி விட்டு போக சொல்லு என கோபமாக கூறிவிட்டு செல்கிறார்.
இன்னொரு பக்கம் ஜீவானந்தத்திற்கு ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஷயம் தெரிய வருகிறது.