நினைத்ததை சாதித்தோம் திமிரில் குணசேகரன், கடைசியில் ஷாக்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் மட்டும் எந்த ஒரு சீரியல் எடுத்தாலும் திருமணம் என்பது அவ்வளவு எளிதாக நடந்துவிடாது.
அதில் வில்லன்களால் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவதும், ஹீரோ-ஹீரோயின் அதனை முறியடித்து திருமணம் நடந்துவதும் என 1 மாதத்திற்கு மேல் திருமண எபிசோடை ஒளிபரப்புவார்கள்.
அப்படி தான் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஒரு திருமணம் நடக்கிறது. குணசேகரன் தர்ஷனுக்கு அன்புக்கரசியுடன் திருமணம் செய்ய முடிவு செய்ய ஈஸ்வரி ஆசையை நிறைவேற்றும் வகையில் ஜனனி பார்கவியுடன் தர்ஷன் திருமணம் நடக்க வேண்டும் என போராடுகிறார்.
புரொமோ
தற்போது இன்றைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில், ஜனனி, ஜீவானந்தம், பார்கவி எப்படியோ புலிகேசி குழுவிடம் இருந்து தப்பித்து மண்டபம் வருகிறார்கள். அதற்குள் மண்டபத்தில் தர்ஷன் தாலியை கட்ட செல்கிறார்.
அவர் தாலி கட்ட தயங்க கதிர் அவனது கையை பிடித்து கட்ட வைக்க முயற்சி செய்ய நிறுத்துங்கள் என்ற சத்தம் வருகிறது.
தான் நினைத்ததை சாதித்தோம் என திமிரில் இருந்த குணசேகரன் என்ன ஆவார், பொறுத்திருந்து காண்போம்.