கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, பெயருக்கு ஏற்றால் போல் பல சவால்களை தாண்டி எதிர்நீச்சல் அடித்து தர்ஷனை திருமணத்தை முடித்துவிட்டார் ஜனனி.
அறிவுக்கரசி திருமணத்தை நடத்தி முடிக்க செய்த காரியம் கடைசியில் திருமணத்தை நிறுத்த அதுவே ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
ரசிகர்கள் பலருக்கும் இப்போது கூட அறிவுக்கரசி தான் சிக்கினார், குணசேகரன் தவறு வெளியே வரவில்லை என கூறி வருகிறார்கள்.
நேற்றைய எபிசோடில் திருமணத்தை முடித்த சந்தோஷத்தில் ஜனனி குழு இருக்க குணசேகரன் மற்றும் தம்பிகள் தோல்வியின் வலியில் உள்ளார்கள்.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், குணசேகரன் தனது அறையில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுகிறார்.
கதிரிடம் அவர் அறிவுக்கரசி அன்னைக்கு ஏதோ வீடியோ, ஈஸ்வரியை கொலை செய்ய முயற்சி செய்தேன் என்று சொன்னாலே என்ன விஷயம் என கேட்க அதற்கு கதிர் ஏதோ கூற கோபத்தில் அவர் சட்டையை பிடிக்கிறார் குணசேகரன்.
அங்கு ஜனனி இனி அவர்கள் நம்மை சும்மா விடப்போவதில்லை, வீட்டிலேயே இருந்து தான் நாம் அவர்களை ஜெயிக்க முடியும் என்கிறார்.
பார்கவி, ஜீவானந்தத்திடம் அன்புக்கரசி செய்த தவறுக்கு இது தண்டனையாக இருக்கலாம், ஆனால் தர்ஷன் செய்த தவறுக்கு என கேள்வி கேட்கிறார். இதோ புரொமோ,