குணசேகரன் போட்ட பிளான், மாற்ற நினைக்கும் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
ஒருவர் தனது மனைவியையே கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அவர் தான் காரணம் என எல்லாருக்கும் தெரியும், ஆனால் அதை நிரூபிக்க ஒரு ஆதாரமும் இல்லை.
அந்த ஆதாரத்தை தேடி ஜனனி போராடி வந்தால் எல்லா விஷயத்தையும் மறந்த ஈஸ்வரி அவரையே குற்றம் கூறி வருகிறார். ஈஸ்வரியே தன்னை நம்பவில்லை என மிகவும் வருத்தப்பட்ட ஜனனி வீட்டில் இருந்தால் குணசேகரன் வழக்கில் சரியாக தீர்வு காண முடியாது என வெளியேறியிருக்கிறார்.
குணசேகரன் வலையில் விழுந்து விட கூடாது என வீட்டில் இருந்து தப்பித்தவர் இப்போது ராணா சூழ்ச்சியில் சிக்கியுள்ளார்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், ஜனனி இப்போது ராணாவின் கண் பார்வையில் முழுவதுமாக உள்ளார். குணசேகரன் வழக்கின் தேதியை மாற்றாமல் வீட்டிற்கு வரப்போவதில்லை என உறுதியாக கூறுகிறார்.

இன்னொரு பக்கம், ஜனனியிடம் சாருலதா ஈஸ்வரி முழுவதும் மாறிவிட்டார் என கேட்க, அவர் இப்போது எல்லா விஷயத்தையும் எமோஷ்னலாக பார்க்கிறார் என்கிறார். கடைசியில் பந்தக்கால் வைக்க ஏற்பாடு செய்துள்ளதாக ஈஸ்வரி குணசேகரனிடம் கூற கோர்ட் பிரச்சனை முடியட்டுமே என்கிறார்.

ஆனால் ஈஸ்வரி இந்த வழக்கிற்காக இதை நிறுத்த வேண்டாமே என்கிறார். அடுத்து குணசேகரன் என்ன முடிவு எடுப்பார் என்பதை இன்றைய எபிசோடில் காண்போம்,