குணசேகரன் பக்கம் சாய்ந்த மருமகள்கள், விசாலாட்சி எடுத்த ஷாக்கிங் முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
குணசேகரனுக்கு எல்லோரையும் தனக்கு கீழ் வைத்து ராஜ்ஜியம் செய்ய வேண்டும் என்பது எண்ணம். இதுநாள் வரை அப்படி தான் எல்லோரையும் ஆட்டி வைக்கிறார், 2 சீசன்கள் வந்துவிட்டது.
இப்போது தர்ஷினி காணாமல் போனதில் இருந்து கதைக்களம் வேறு விதமாக செல்கிறது, குணசேகரனை விட மிகவும் மோசமானவராக ராணா களமிறங்கியுள்ளார்.

தான் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் எந்த லெவலுக்கும் செல்லக் கூடியவராக தான் இவரும் உள்ளார்.
வில்லன்களுக்கு மிகவும் பவர்புல்லான கதைக்களம் உள்ளது. ஆனால் அனைவரும் சுயமரியாதையுடன் அவரவர் சொந்த காலில் நின்று வாழ்க்கை வாழ வேண்டும் என நினைத்த ஜனனியின் கதாபாத்திர கதைக்களம் தான் வெயிட்டே இல்லாதது போல் உள்ளது.
எப்போது யாரு அடி வாங்கிக் கொண்டே இருக்கிறார், தவறு செய்பவர்கள் ஜாலியாக உள்ளார்கள்.

புரொமோ
தற்போது இன்றைய எபிசோடின் புரொமோவில், சக்தி உறவை ரத்த செய்யும் வேலைகள் நடக்கிறது. குணசேகரன் இந்த விஷயத்தை கூறியதும் விசாலாட்சி எதிர்ப்பு தெரிவித்தார், ஆனால் ஈஸ்வரி அவர் கணவரின் முடிவுக்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

இனி சக்திக்கும் ஜனனிக்கும் இந்த குடும்பத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை என ராணா எல்லோரையும் கையெழுத்து போட சொல்ல ஈஸ்வரி அதை செய்கிறார், அதேபோல் ரேணுகா, நந்தினியும் கையெழுத்து போடுகிறார்கள்.
அவர்களின் செயலை கண்ட விசாலாட்சி மிகவும் மனமுடைந்து போகிறார். நீ மட்டும் தான் கையெழுத்து போடவில்லை, உன் மகன் சக்தி வந்ததும் அவனுடன் சென்றுவிடு உன் உறவை ரத்து செய்கிறேன் என்கிறார் குணசேகரன்.

உடனே விசாலாட்சி எழுந்து வீட்டைவிட்டு வெளியே செல்கிறார், அவரின் செயலை கண்டதும் நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி ஷாக் ஆகிறார்கள்.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri