ஆபத்தான நிலையில் ராவணன், குணசேகரன் அடுத்த கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கடந்த சில நாட்களாக ஒரு பரபரப்பான கதைக்களம் செல்கிறது.
அதாவது குணசேகரன் கட்டுகட்டும் பூஜையை செய்தே ஆக வேண்டும், இதில் ஜனனிக்கு கண்டிப்பாக அழிவு இருக்கிறது என பிளான் போட்டார். ராவணன் குணசேகரன் பிளானிற்கு தனது முகு ஆதரவை காட்டி வந்தார்.

ஜாமின் கேன்சல் செய்யப்பட்ட போதிலும் குணசேகரனை தனியாக வீட்டில் மறைத்து வைத்து பூஜை நடக்கும் வரை துணையாக இருந்தார்.
ராவணன் பூஜையில் குணசேகரன் கண்டிப்பாக ஜனனியை தாக்குவார் என எதிர்ப்பார்த்தார், ஆனால் நடந்தது எல்லோருக்கும் ஷாக். குணசேகரன் ராவணனை தாக்க அடுத்து என்ன நடக்கப்போகிறது என அனைவரும் ஷாக்கில் உள்ளனர்.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், ராவணன் தன்னை அழிக்க வந்தவன் அதான் குத்தினேன் என குணசேகரன் கூறுகிறார்.

அதோடு தனக்கு மனநிலை சரியில்லை என்ற நாடகத்தை தற்போது போட்டுள்ளார். இன்னொரு பக்கம் காயப்பட்ட ராவணன் மிகவும் சீரியஸான நிலையில் உள்ளாராம்.
ஜனனி, சாமியை வைத்து அவர் எவ்வளவு கேவலமான டிராமா போடுகிறார், கண்டிப்பாக அவருக்கு அழிவு இருக்கு என கோபப்படுகிறார்.
மேலாடையின்றி 115 மைல் வேகத்தில் ரேஞ்ச் ரோவரில் பறந்த நபர்: சினிமா பாணியில் சிக்கிய சம்பவம் News Lankasri
ஈரானை முற்றிலுமாக அழிப்பதாக மிரட்டல் விடுத்த ட்ரம்ப்: அரண்டுபோன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை News Lankasri