ஜனனி,சக்தி எடுத்த ஷாக்கிங் முடிவு, தடுக்க நினைக்கும் ராவணன்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் என்னடா கதை என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பாகிறது.
இயக்குனர் எப்படிபட்ட கருவோடு இந்த சீரியலை உருவாக்க தொடங்கினார் என்பதை மறந்துவிட்டாரா என ரசிகர்கள் தினமும் புலம்பி வருகிறார்கள்.

நியாயத்திற்காக போராடும் ஜனனியை நாளுக்கு நாள் டம்மியாக்கி, வில்லத்தனம் செய்யும் குணசேகரன், ராவணன் ஆகியோரின் கை ஓங்கியபடி கதையை அமைத்த வண்ணம் உள்ளார்.
குணசேகரன் வீட்டிற்கு வந்த ராவணன் ஒவ்வொரு நாளும் ஒரு பிளான் போட்டு வீட்டை தனது கைக்குள் வைத்து வருகிறார்.

புரொமோ
கடைசி எபிசோடில், வீட்டில் கதிர்-ஞானம் ஆரம்பிக்கும் புதிய தொழிலுக்கான பூஜை நடக்கிறது. அதில் விசாலாட்சி கலந்துகொள்ள மருமகள்கள் கேட்டுக் கொண்டதால் பூஜை செய்து மகன்களை வாழ்த்தினார்.

இப்போது இன்று ஒளிபரப்பாக போகும் எபிசோடின் புரொமோ வந்துள்ளது. அதில், விசாலாட்சி நந்தினி-ரேணுகாவிடம் நாங்கள் 3 பேரும் வெளியே போகிறோம் என கூறி ஷாக் கொடுக்கிறார்.
பின் ராவணனுக்கு இந்த விஷயம் தெரியவர அவர்களை வெளியே போக விடாமல் தடுக்க வேண்டும் என குணசேகரனுக்கு ஐடியா கொடுக்கிறார். இதோ புரொமோ,
நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள் - 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பும் முதல்வர் விஜய் IBC Tamilnadu
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri