தர்ஷனை அடித்து அராஜகத்தை தொடங்கிய குணசேகரன், சக்தி நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
ஆணாதிக்கம் கொண்ட குணசேகரன் வீட்டுப் பெண்கள் அடிமையாக வாழ்ந்தது போதும் நிமிர்ந்து நிற்போம் என பல பிரச்சனைகளில் எதிர்நீச்சல் போட்டு சாதிப்பதே இந்த தொடரின் கதையாக இருக்கும் என தான் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் கதை செல்வதை பார்த்தால் இயக்குனர் வில்லன் எந்த தவறு செய்தாலும் அதில் இருந்து தப்பிக்க பல விஷயங்களை செய்து எதிர்நீச்சல் போட்டு மேலும் மேலும் தவறு செய்யும் வண்ணம் கதை அமைந்து வருகிறது.

ஹீரோ-வில்லன் சமமாக இருந்தால் தான் கதை சுவாரஸ்யமாக இருக்கும், ஆனால் வில்லன் கையே எப்போதும் ஓங்கி உள்ளது, இது நாங்கள் கொடுக்கும் விமர்சனம் கிடையாது, ரசிகர்கள் கூறுவது தான். எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோக்களின் கீழ் சென்று பார்த்தால் உங்களுக்கு புரியும்.

புரொமோ
சக்தியை வைத்து மிரட்டி ஜனனியை வெளியே அனுப்பிவிட்டார் குணசேகரன். நேற்றைய எபிசோடில் பார்கவிக்கு செக் வைக்க போலீஸை எல்லாம் வீட்டிற்கு வர வைத்தார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடின் பரபரப்பு புரொமோ வெளியாகியுள்ளது. அதில், தர்ஷன் அடித்து கீழே தள்ளி மோசமாக நடந்து கொள்கிறார் குணசேகரன். தர்ஷன் என்ன செய்வது என தெரியாமல் இவர்களை வெளியே போக சொல்லுங்கள் என கத்துகிறார்.
இன்னொரு பக்கம் ஜனனி, சக்தியை தேடி அலைகிறார்.