பார்கவி-தர்ஷனுக்கு தல தீபாவளி ஏற்பாடு செய்யும் நந்தினி, ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் கடந்த வார டிஆர்பியில் டாப்பில் கலக்கிய தொடர்களில் 2ம் இடம் பிடித்து மாஸ் காட்டியுள்ளது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
தர்ஷன் திருமண எபிசோடுகள் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாக டிஆர்பியும் எகிறியுள்ளது. இந்த பரபரப்பு கடந்த வாரம் முடிந்துவிட்டது, அடுத்து குணசேகரனை எப்படி ஜனனி குழு எதிர்க்கொள்ள போகிறார்கள் என்று பார்த்தால் வீடியோ ஆதாரத்தை வைத்து மிரட்டி வந்தனர்.
ஆனால் உண்மையில் ஜனனியிடம் எந்த ஆதாரமும் இல்லை. இன்னொரு பக்கம் சக்தியிடம் பல வருடம் முன்பு குணசேகரனுக்கு எழுதப்பட்ட கடிதம் கிடைத்துள்ளது.
அது என்ன, யார் அது என கண்டுபிடிக்கும் வேலைகளில் சக்தி இறங்கவுள்ளார்.
புரொமோ
தற்போது இன்றைய எபிசோடின் புரொமோவில், தர்ஷன்-பார்கவிக்கு தல தீபாவளி கொண்டாடுவோம் என நந்தினி கூறுகிறார்.
பின் பார்கவிக்கு ஒரு பார்சல் வருகிறது, அதை வாங்கிக்கொண்டவர் ஜீவானந்தத்திற்கு போன் செய்து வெண்பாவுடன் தீபாவளி கொண்டாலாமா என கேட்கிறார்.
அதற்கு ஜீவானந்தம் உனக்கு தல தீபாவளி என கூறுகிறார்.