வழக்கில் இருந்து தப்பிக்க அடுத்து குணசேகரன் பயன்படுத்திய ஆயுதம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல்.
கதை ஆரம்பித்த நாள் முதல் குணசேகரன் என்ற ஆணாதிக்கம் எண்ணம் கொண்டவரிடம் போராடி அவரத வீட்டுப் பெண்கள் சாதிக்கும் கதையாகவே இந்த தொடர் இருக்கிறது.
கதை முழுவதும் பெண் அடிமை எண்ணம் கொண்ட குணசேகரன் ஆதிக்கம் தான் அதிகம் உள்ளது, பெண்கள் சாதித்தார்கள் என்று கூறும் அளவிற்கு கதையில் இதுவரை எதுவும் நடக்கவில்லை.

புரொமோ
குணசேகரன் மீது போடப்பட்ட குண்டாஸ் வழக்கில் இருந்து தப்பித்து வெளியே வந்திருந்தார்.

எப்படி இந்த வழக்கில் ஜாமின் கிடைத்து வெளியே வந்தார் என்பது தெரியவில்லை, ஆனால் தேவசகாயத்திடம் இருந்து தப்பித்து வந்த மதிவதனி மீண்டும் குணசேகரன் வழக்கை தொடங்குவதற்காக நிறைய விஷயங்கள் செய்தார்.
கடந்த சில நாட்களாகவே குணசேகரன் எனது ஜாமின் கேன்சல் ஆகிவிடும் என தம்பிகளுக்கு சொத்தை எழுதிக்கொடுத்து அவர்களை வைத்து அவர்களின் மனைவியை வழிக்கு கொண்டு வர முடிவு செய்தார்.

ஆனால் நந்தினி-ரேணுகா மாறுவது போல் தெரியவில்லை. ஜனனிக்கு எதிராக பூஜை செய்த குணசேகரன் இப்போது தன் மீது போடப்பட்டுள்ள வழக்கில் இருந்து தப்பிக்க தனது அம்மாவை பயன்படுத்த நாடகம் போட்டு வருகிறார்.
முதலில் கதிர் தனது அண்ணனுக்காக அம்மாவிடம் கெஞ்சினார், இப்போது குணசேகரனே தனது அம்மாவிடம் நல்லவன் போல் நடித்து அவர் மனதை மாற்ற நினைக்கிறார்.
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri