ஞானத்திற்கு அழுத்தம் கொடுத்த குணசேகரன், ஜனனி எடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள் எப்போதுமே பரபரப்பாகவே உள்ளனர்.
காரணம் அந்த அளவிற்கு சீரியலும் அடுத்து என்ன அடுத்து என்ன இப்போது என்ன ஆகும் என ரசிகர்கள் புலம்பி தள்ளும் அளவிற்கு தான் உள்ளது. இன்னும் 2 நாட்களில் ஜனனி, ரேணுகா, நந்தினி தங்களது கிட்சன் திறப்பு விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால் குணசேகரனுக்கு அவர்கள் தொழில் தொடங்குவது சுத்தமாக பிடிக்கவே இல்லை, எப்படியாவது தடுக்க வேண்டும் என பல கிரிமினல் வேலைகள் செய்து வருகிறார்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், ஞானம் திடீரென அவரது மனைவி பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது என கதிர், குணசேகரன், கரிகாலன் நினைக்கிறார்கள்.

அப்படி ஒன்றும் நடக்காது என்று சத்தியம் செய் என ஞானத்திடம் கூறுகிறார் குணசேகரன். இன்னொரு பக்கம் தனது அண்ணனால் வீட்டுப் பெண்களுக்கு கடை திறப்பு விழாவில் பிரச்சனை வரப்போகிறது என இரண்டு நாள் தள்ளி வைத்துக் கொள்ளலாமா என சக்தி, ஜனனியிடம் கேட்கிறார்.
அதற்கு ஜனனி, அவர் எங்கு இருந்தாலும் செய்ய நினைத்ததை செய்தே ஆவார். மோதுனா என்ன ஆகும் என பயந்துகொண்டே இருப்பதற்கு ஒருமுறை மோதி தான் பார்ப்போம் என தைரியமாக கூறுகிறார்.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan