திருமணத்தை நிறுத்தி அதிரடி முடிவு எடுத்த பார்கவி, சந்தோஷப்பட்ட ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எந்த ஒரு சீரியல் எடுத்தாலும் திருமணம் என்ற விஷயம் சாதாரணமாக நடந்தது போல் தெரியவில்லை.
இப்போது சன் டிவியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஏற்கெனவே பல போராட்டங்களுக்கு பிறகு நடந்து முடிந்த தர்ஷன்-பார்கவி திருமணத்தை பார்க்க விரும்புவதாக ஈஸ்வரி கூறி மீண்டும் திருமண ஏற்பாடுகள் நடந்தது.

திருமண ஏற்பாடுகளுக்கு இடையில் நீதிமன்ற பிரச்சனை, ஜனனி-சக்தி வீட்டிற்கு வந்த பிரச்சனை என நிறைய நடந்துவிட்டது. இந்த திருமண ஏற்பாட்டில் ஜனனிக்கும்-ஈஸ்வரிக்கும் பெரிய இடைவெளி வந்துவிட்டது.

புரொமோ
நேற்றைய எபிசோடில், பார்கவி தர்ஷனுக்கும் எனக்கும் செட் ஆகாது, இருவருக்குள்ளும் நம்பிக்கை இருக்க வேண்டும் அது எங்களுக்குள் இல்லை என கூறுகிறார். குணசேகரன் எப்போது வந்து பேசுகிறாய் என கூற இப்போது பேசவில்லை என்றால் எப்போதும் பேச முடியாது.

என்னால் இவர்களை போல் வாழ்நாள் முழுவதும் அடிமையாக இருக்க முடியாது என கூற ஈஸ்வரி ஷாக் ஆகிறார்.
பின் பார்கவி, இந்த அடிமை வாழ்க்கை வேண்டாம் என அந்த வீட்டைவிட்டு வெளியேறுகிறார். அதைப்பார்த்த ஜனனி சந்தோஷப்படுகிறார், உனக்கு என்ன வேண்டும் என்பது உனக்கு தெரிந்தது சந்தோஷம் என்கிறார்.