பார்கவியை அழ வைக்க அன்புக்கரசி செய்த கேவலமான வேலை, ஜனனிக்கு கிடைத்த வழி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் வில்லனின் கை ஓங்கியபடியே உள்ளது.
வீடியோவை வைத்து குணசேகரனை லாக் செய்யலாம் என பெண்கள் போராடினால் அவர் வேறொரு வழிகளில் தனது வீட்டுப் பெண்களை மீண்டும் அடிமையாக்க தொடங்கிவிட்டார்.
சக்தியை கடத்திவைத்து ஜனனியை வீட்டைவிட்டு அனுப்பி வைத்துவிட்டார், பார்கவியை வீட்டைவிட்டு அனுப்ப தர்ஷனுக்கும்-அன்புக்கரசிக்கும் திருமண பதிவு செய்து ஜெயித்துவிட்டார்.
இப்போது பார்கவி என்ன செய்வது என தெரியாமல் அந்த வீட்டில் தவித்துக்கொண்டு இருக்கிறார். இதற்கு இடையில் ஜெயிலில் இருந்து அறிவுக்கரசி மீண்டும் குணசேகரன் வீட்டிற்கு வருகிறார்.

புரொமோ
தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் புரொமோவில், ஜனனிக்கு சக்தி எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்கும் போராட்டத்தில் அவருக்கு ஒரு வழி கிடைக்கிறது.

இன்னொரு பக்கம், பார்கவி தர்ஷனுக்கு போன் செய்வதை பார்த்த அன்புக்கரசி அவருக்கு தெரியாமல் போனை ஆன் செய்து கொச்சையாக பேசுகிறார்.
அதனை கேட்ட பார்கவி தனது மன வேதனையை தர்ஷினியிடம் கூறி வருத்தப்படுகிறார். இதோ புரொமோ,